இந்தியா

ஒருசில மாதங்களில் 10 ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு: லட்சக்கணக்கான கோடிகள் நஷ்டம்

Published

on

இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடி நஷ்டம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து வருகிறது. குறிப்பாக இன்று 1,200 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளாக இருந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 10,000 புள்ளிகள் சரிந்து 52000 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது..

இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் லட்சகணக்கான கோடிகள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு 20 ஆயிரம் வரை நஷ்டம் ஆகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு காணாத சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி நஷ்டம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது ஆகியவைதான் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version