இந்தியா

ரூ.10 கோடி கொடுத்து வாங்கிய பிளாட்.. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் குடியிருப்பாளர்கள் அவதி..!

Published

on

கோடி கணக்கில் செலவு செய்து சொந்த வீடு வாங்குவது நிம்மதியான வாழ்க்கைக்காக தான் என்ற நிலையில் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டில் துர்நாற்றமும் கொசுக்கடியும் இருப்பதாக மும்பையை சேர்ந்த குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள ஆடம்பர பகுதிகளில் ஒன்று ஜூஹு வைல் பார்லே பகுதியில் அமைந்துள்ள ஆசாத் நகர் குடியிருப்பு. இதில் 28 பிளாட்டுகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் 10 கோடி வரை விற்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த குடியிருப்பில் இருப்பவர்கள் தங்கள் குடியிருப்பு நரகமாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

ஆசாத் நகர் பின்புறம் வடிகால் ஓடுவதை அடுத்து அந்த வடிகாலில் தாவரங்கள் மற்றும் குப்பைகள் நிரம்பி வருவதால் அடைத்துவிட்டன என்றும் இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறி உள்ளது என்றும் கூறியுள்ளனர். மாலை நேரங்களில் எங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் கொசுவலை இல்லாமல் தூங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த பகுதி முழுவதுமே கொசுக்கள் நிறைந்த பகுதியாக மாறிவிடுகிறது என்றும் அவ்வப்போது மும்பை மாநகராட்சி தற்காலிக தீர்வை செய்து தந்தாலும் எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் இந்த குடியுரிப்பாளர்களை ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குடியிருப்பை அடுத்து பக்கத்தில் உள்ள சேரிகளில் இருந்து வரும் கழிவு நீர் தாவரங்களால் வடிகால் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியவில்லை என்றும் மாலை நேரத்தில் கொசு வராமல் இருப்பதற்காக மதியமே வீட்டில் ஜன்னல்களை எல்லாம் மூட வேண்டிய நிலை இருப்பது என்று மற்றொரு குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொசுக்கள் காரணமாக மாலை நேரங்களில் குழந்தைகளை விளையாட கூட வெளியே அனுப்ப முடியவில்லை என்றும் கொசுவலை பயன்படுத்தாமல் இரவு எங்களால் தூங்க முடியவில்லை என்றும் அது மட்டும் என்று துர்நாற்றம் அதிகம் இருப்பதால் இது ஒரு வாழும் நரகமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இந்த பகுதியில் உள்ள வாய்க்காலை தூர் செய்ய வேண்டும் என்றும் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பத்து கோடி ரூபாய் கொடுத்து ஒரு வீடு வாங்கியும் அதில் நிம்மதியாக குடியிருக்க முடியவில்லை என்றால் மும்பை மாநகராட்சி இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து மும்பை நகராட்சி துணை கமிஷனர் கூறிய போது வடிகால் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றும் ஒவ்வொரு நாளும் லார்வா தடுப்பு சிகிச்சை மற்றும் கொசுக்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் விரைவில் இந்த பகுதியை குடியிருப்பாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version