இந்தியா

பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

Published

on

பார்வையற்ற தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் தண்டவாளம் அருகே இருந்த நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து அங்கு இருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையை காப்பாற்றியதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மும்பையிலுள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு ரயில் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. குழந்தை மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதை அறிந்த அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் வேகமாக ஓடி அந்த குழந்தையை காப்பாற்றி தானும் நடைமேடை மேல் ஏறினார். அவர் நடைமேடை மேலேறிய அடுத்த ஒரு சில வினாடிகளில் ரயில் கடந்து சென்றது.

தனது உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையை காப்பாற்றிய அந்த மாவீரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குழந்தையை காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியரின் பெயர் மயூர் ஷெல்கே எனவும் அவருக்கு ரயில்வே துறை ஊழியர்களும் அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உயிரை பணயம் வைத்து சிறுவனைக் காப்பாற்றிய பாயிண்ட்ஸ் மேன் மயூர் ஷெல்கேவுக்கு கைதட்டி மத்திய ரயில்வே ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

seithichurul

Trending

Exit mobile version