இந்தியா

2022ல் காண்டம்களை வாங்கி குவித்த 2 இந்திய நகர மக்கள்: டன்சோ அறிவிப்பு

Published

on

2022 ஆம் ஆண்டில் இரண்டு இந்திய நகரங்களில் உள்ள மக்கள் காண்டம்களை அதிக அளவு வாங்கி குவித்து இருப்பதாக டன்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் விடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். சராசரியாக ஒரு நொடிக்கு 2 பிரியாணி விற்பனை ஆனது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டன்சோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022ஆம் ஆண்டில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய 2 நகரங்களில் வாழும் மக்கள் அதிக அளவில் காண்டம்கள் ஆர்டர் செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் அதிக அளவு காண்டம்களை வாங்கியது மும்பை நகர மக்கள் தான் என்றும் இரண்டாம் இடத்திலுள்ள டெல்லியை விட மூன்று மடங்கு அதிகமாக மும்பை மக்கள் காண்டம்களை வாங்கி உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அளவில் அதிகமாக நுகர்வோர்களால் வாங்கப்பட்ட பொருள் பால் என்றும் அதுமட்டுமின்றி காய்கறிகளில் தக்காளி உருளைக்கிழங்கு ஆகிய இரண்டும் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து வாழைப்பழங்கள் அதிகமாக விற்பனையான பழங்கள் என்றும் டன்சோ அறிவித்துள்ளது.

மேலும் உணவுப் பொருட்கள் சாக்லெட்டுகள் மற்றும் வழக்கமான தேவையான பொருட்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆர்டர்களை உடனுக்குடன் டன்சோ டெலிவரி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கட்டுப்பாடு இருந்தாலும் அதன் பிறகு பொதுமக்கள் அதிக அளவில் உணவுப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்தார்கள் என்றும் டன்சோ தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version