கிரிக்கெட்

பெங்களூரை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் விராட் கோலி 1 ரன்னிலும், அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

பெங்களூர் 199 ரன்கள்

மேக்ஸ்வெல், கேப்டன் டூ பிளிஸ்சிசுடன் இணைந்தார். மேக்ஸ்வெல் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 120 ரன்களைச் சேர்த்தனர். அடுத்து வந்ல மஹிபால் லோம்ரோர் ஒரு ரன்னில் அவுட் ஆக, பிளிஸ்சிஸ் 65 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 30 ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்களளை குவித்தது. மும்பை தரப்பில் பெரன்டோர்ப் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

மும்பை வெற்றி

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் ஹசரங்கா சுழலில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்தார்.

இருவரும் அணியை வெற்றியை நோக்கி வேகமாக நகர்த்தினர். சூர்யகுமார் யாதவ் 83 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். நேஹல் வதேரா சிக்சர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 16.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நேஹல் வதேரா 52 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ஹசரங்கா மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version