கிரிக்கெட்

9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி: மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வி!

Published

on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி மிக அபாரமாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. ஏற்கனவே மும்பை அணி ஐதராபாத், டெல்லி ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் அந்த அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து மும்பை அணி களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா 63 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 132 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடைசி வரை அவுட் ஆகாமல் 60 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெய்லே 45 ரன்களும் மயங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்தனர்.

நேற்றைய போட்டியில் கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version