இந்தியா

1-9ம் வகுப்பு பள்ளிகள் மூட உத்தரவு: எங்கே தெரியுமா?

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகம் என்பதும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே மும்பையில் தான் மிக அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் மும்பை மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது பிறப்பிக்கப்பட்டது போல் தற்போதும் பள்ளிகளை மூடுவது, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருவதைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு முறை இந்தியா முழு ஊரடங்கை சந்திக்குமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Trending

Exit mobile version