இந்தியா

இந்தியாவின் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு.. ரூ.240 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர்..!

Published

on

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொழிலதிபர் ஒருவர் ரூ.240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில் இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுதான் என்று தகவல் வெளீயாகியுள்ளன.

இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் தங்குவதற்கு பலர் முன் வருகின்றனர் என்பது தெரிந்ததே. விலை மலிவாகவும் அதே நேரத்தில் ஆடம்பர வசதிகள் கொண்டவையாகவும் இருப்பதால் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகளை பலர் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஓர்லி என்ற பகுதியில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தொழிலதிபர் கோயங்கா என்பவர் வாங்கியுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பு ரூபாய் 240 கோடிக்கு அவர் வாங்கி உள்ளதை அடுத்து இந்தியாவின் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுவே என்று கருதப்படுகிறது.

மும்பையில் உள்ள ஓர்லி பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் சாலையில் இந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இரட்டை கோபுரங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்றும் பெண்ட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை ரூபாய் 240 கோடிக்கு தொழிலதிபர் பிகே கொயங்கா அவர்கள் வாங்கி உள்ளார். இவர் வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மொத்தம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான பத்திரப்பதிவு கடந்த புதன்கிழமை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ரியல் எஸ்டேட் ஆய்வு மற்றும் தரவரிசை நிறுவனம் ஒன்றின் தலைவர் பங்கஜ்கபூர் அவர்கள் கூறியபோது, ‘இந்தியாவில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் விலை உயர்ந்த குடியிருப்பு இந்த பெண்ட் ஹவுஸ் தான் என்றும் அடுத்த சில மாதங்களில் இதே போன்று மேலும் சில குடியிருப்புகள் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version