இந்தியா

கடைசி இடத்தில் உள்ள மும்பை ,சென்னைக்கு முதல் இரண்டு இடங்கள் கொடுத்த ஃபோர்ப்ஸ்!

Published

on

ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பைக்கு ஃபோர்ப்ஸ் நிறுவனம் முதல் இடத்தை கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

போர்ப்ஸ் நிறுவனம் ஐபிஎல் அணிகளின் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மும்பை அணி முதலிடத்திலும் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதும் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள குஜராத் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள மதிப்புமிக்க ஐபிஎல் அணிகளின் பட்டியல் குறித்த தகவல் இதோ:

1. மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்பு: $1.3 பில்லியன்

2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு : $1.15 பில்லியன்

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு: $1.1 பில்லியன்

4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மதிப்பு: $1.075 பில்லியன்

5. டெல்லி கேபிடல்ஸ் அணியின் மதிப்பு: $1.035 பில்லியன்

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மதிப்பு: $1.025 பில்லியன்

7. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு: $1 பில்லியன்

8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மதிப்பு: $970 மில்லியன்

9. பஞ்சாப் கிங்ஸ் அணியின் மதிப்பு: $925 மில்லியன்

10. குஜராத் டைட்டன்ஸ் அணியின் மதிப்பு: $850 மில்லியன்

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில் சுமார் 7,660 கோடி என்றால் மேற்கண்ட அணிகளின் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்பதை கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள்.

ஐபிஎல், சென்னை, மும்பை,

seithichurul

Trending

Exit mobile version