தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டினார் பல்கலை. துணைவேந்தர்!

Published

on

முள்ளிவாய்க்கால் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடத்தில், யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் புதிய சின்னத்திற்கான அடிக்கலை நாட்டினார்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுச்சின்னத்தை இலங்கை ராணுவத்தினர் இரவோடு இரவாக சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராடிய நிலையில், இரண்டு மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவரகளை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இருப்பினும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலையே புதிய நினைவு ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டுவதாக துணைவேந்தர் ராஜா உறுதியளித்தார். அதன்படி, இன்று காலை மாணவர்கள் மத்தியில், கற்பூரம், தேங்காய் ஏற்றி புதிய நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு மாணவர்கள் சமாதானமடைந்தனர். 

Trending

Exit mobile version