இந்தியா

இந்தியாவில் முதலிடம்.. உலக அளவில் 9வது இடம்.. அதானியை முந்திய அம்பானி..!..!

Published

on

உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருந்த அதானி திடீரென நஷ்டம் அடைந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்திலும் முகேஷ் அம்பானி உள்ளார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்தது என்றும் அதன் காரணமாக அதானி இரண்டாவது இடத்தில் இருந்து 20 இடத்திற்கும் பின்னால் தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக பணக்காரர் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானி டாப் 10ல் உள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதானி சொத்து மதிப்பு 28 பில்லியன் வரை குறைந்ததால் அவர் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற பட்டத்தை இழந்து உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா அளவில் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார் என்பதும் அவர் 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனர் ரஸ் பூனவல்லா27 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக உள்ளார். தடுப்பூசி மன்னன் என்று போற்றப்படும் இவர் தடுப்பூசி தயாரித்தே பில்லியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் இந்த பட்டியலில் ஒவ்வொரு வாரமும் 5 பில்லியனர்களை இழந்துள்ளது என்றும் உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3112 என குறைந்துள்ளது என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக இருக்கும் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ் தனது நிகர சொத்து மதிப்பில் 70 பில்லியன் டாலரை இழந்து உள்ளார். இது அதானி, அம்பானி ஆகிய இருவரும் சேர்ந்து இழந்ததை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ராகேஷ் மற்றும் ராகுல் பாட்டியா 3.3 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பணக்காரர்களாக உள்ளனர். அதேபோல் பைஜூ ரவீந்திரன் உலக அளவில் கல்வித் துறையில் இரண்டாவது பணக்கார தொழிலதிபராக உள்ளார். உலக பில்லியனர்களில் 356-வது இடத்தில் குமார் மங்கலம் பிர்லா உலகின் இரண்டாவது பணக்கார சிமெண்ட் உற்பத்தியாளர் என்ற பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

187 பில்லியனர்களைக் கொண்ட இந்தியா, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உலக கோடீஸ்வரர்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 4.9% ஆக இருந்த மொத்த உலக பில்லியனர் எண்ணிக்கை, மக்கள் தொகையில் தற்போது இந்தியா 8% பங்களிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version