சினிமா

ரூ 1000 கோடி செலவில் “மகாபாரதம்“ முக்கிய வேடத்தில் பாகுபலி!

Published

on

ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட உள்ள ‘மகாபாரதம்’ படத்தில் நடிக்க, ‘பாகுபலி’ பிரபாஸின் பெயரை இந்தி நடிகர் அமீர் கான் பரிந்துரை செய்துள்ளார், எனப் பாலிவுட் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.

இப்போதெல்லாம் சினிமாவில் நல்ல படங்களுக்குக் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, வரலாற்றுக் கதைகளைப் படமாக்க திரையுலகம் ஆர்வம்காட்டிவருகிறது. இந்தியாவின் பிரதான மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரலாற்றுப் படங்கள் தயாராகிவருகின்றன.

வரலாற்றுக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் சாதனைகளைக் குவித்தது. இந்நிலையில் மகாபாரதம் எடுத்த பிரம்மாண்ட படம் தயாராயுள்ளது.

முகேஷ் அம்பானி ரூ 1000 கோடி செலவில் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதில் அமீர்கான் நடிக்கவுள்ளார். பல பெரிய கதாப்பாத்திரங்கள் இருக்கையில் அவர் தன்னை மிகவும் கவர்ந்தது இரண்டு வேடங்கள் தான்.

ஒன்று ஸ்ரீ கிருஷ்ணன், இன்னொன்று கர்ணன். இந்த இரண்டில் எனக்கு எதுவானாலும் ஓகே எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அவரைக் கிருஷ்ணன் கதாப்பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

இதிகாச புராணம் என்பதாலும் இக்கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவை என்பதால் இப்படத்தை முன்பே வேண்டாம் என்று சொன்ன அமீர்கான், தற்போது நடித்து வரும் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படத்தைத் தொடர்ந்து அப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

திரௌபதி வேடத்தில் தீபிகா படுகோன் நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், அர்ஜுனன் கதாப்பாத்திரத்தில் பாகுபலி பிரபாஸ் நடிக்க வேண்டுமென அமீர் கான் பரிந்துரைத்துள்ளார் எனவும், மற்ற கதாப்பாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுவருகிறது எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version