வணிகம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தற்போது ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

2021 மார்ச் 31க்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற ரிலையன்ஸ் இலக்கு நிர்ணயித்திருந்தது. பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி முதலீடாக பெற்ற 43,573.62 கோடி ரூபாய், சில்வர் லேக் பார்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மே 4-ம் தேதி முதலீடாகப் பெற்ற 5,655.75 கோடி ரூபாய், விஸ்டா இக்விட்டி பார்ட்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மே 8-ம் தேதி பெற்ற 11,367 கோடி ரூபாய், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இர்ந்து மே 17-ம் தேதி பெற்ற 6,598.38 கோடி ரூபாய், கேகேஆர் நிறுவனத்திடம் இருந்து மே 28-ம் தேதி பெற்ற 11,367 கோடி ரூபாய், முபாடியா நிறுவனத்திடம் இருந்து ஜூன் 5-ம் தேதி பெற்ற 9,093 கோடி ரூபாய் என பல்வேறு வகையில் 1.75 கோடி ரூபாய் நிதியை பெற்ற ரிலையன்ஸ் இடன்ஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக உருவாகியது. நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனில்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலராக அதிகரித்தது. எனவே முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 160.4 பில்லையன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்திலும், அவரை தொடர்ந்து மைக்ரோசாட் நிறுவனர் பில் கேட்ஸ் 109.9 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 64.8 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் கூகுள் இணை நிறுவனர் லேர் பேஜ் 8 வது இடத்தில் உள்ள நிலையில், அவரை விரைவில் அம்பானி முந்திச்செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9வது இடத்திலும், டீமார்ட் நிறுவனர் ராதாகிஷ தமானி 82 வது இடத்திலும், எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 105வது இடத்திலும், அதானி குழும தலைவரும் மோடியின் நண்பருமான கவுதம் அதானி 121வது இடத்திலும் உள்ளார். சன் குழுமத் தலைவர் கலாந்தி மாறன் இந்த பட்டியலில் 1387வது இடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version