வணிகம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு பின்னடைவு.. என்ன காரணம்?

Published

on

உலகின் 4-ம் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலைக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி, மீண்டும் 13வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க்கின் உலகின் 100 பணக்காரர்களில் பட்டியலில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.62 லட்சம் கோடியிலிருந்து 5.36 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 காலத்தில் உலகம் முழுவதும் மக்கள் பொருளாதார சிக்கலிலிருந்தன. ஆனால் முகேஷ் அம்பானி மட்டும் அதில் விதிவிலக்கு. கொவிட்-19 தொற்றை மீறியும் லட்சம் கோடி முதலீடுகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்காக பெற்றார்.

ஃப்யூச்சர் குழுமத்துக்குச் சொந்தமான பிக் பஜார் பல்பொருள் அங்காடி நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய போது சிக்கல் ஆரம்பிதித்தது. அதில் அமேசான் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சரிந்தது. இதுவே முகேஷ் அம்பானிக்கு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்ட சரிவுக்குக் காரணம் ஆகும்.

டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2017-ம் ஆண்டு முதல் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 2-ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version