இந்தியா

மும்பை, குஜராத்தில் மர்ம நோய் பரவல்.. 9 பேர் பலி!

Published

on

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது மும்பை, குஜராத்தில் மற்றொரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழவதும் உலுக்கி விட்டது. இந்தியாவில் இப்போது தான் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட நகரில் அரிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோயின் பெயர் மியூகோமிகோசிஸ் ஆகும்.

காற்றில், சுற்றுச்சுழலில் இருக்கும் பூஞ்சைகள் காரணமாக மியூகோமிகோசிஸ் நோய் பரவுவதாகவும் இதுவரையில் 44 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும், 9 பேர் மியூகோமிகோசிஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர்.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே தங்களை சோதனைக்கு உட்படுத்தி, குணமாக்கினால் மட்டுமே உண்டு. ஏனெனில்,இதுவும் கொரோனா போன்றே மூக்கு, கண்கள் வழியாக பரவுகின்றன.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மியூகோமிகோசிஸ் நோயிலிருந்து சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக  நீரிழவு, கணைய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Trending

Exit mobile version