இந்தியா

துப்புறவு தொழிலாளியாக எம்.எஸ்.சி படித்த பெண்: ஊடக செய்தியால் திடீர் திருப்பம்!

Published

on

எம்எஸ்சி படித்த பெண் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது செய்தி ஊடகத்தில் வந்ததால் அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஜனி என்பவர் கூலி விவசாயின் மகளாக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திடீரென அவரது கணவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டதால் அவர் படுக்கையாக விழுந்தார். எனவே கணவர், குழந்தைகள், மாமனார், மாமியார், என அனைவரையும் காப்பாற்ற வேண்டிய நிலைமை ரஜனியின் தலையில் விழுந்தது.

இதனை அடுத்து அவர் தனது குடும்ப வறுமை காரணமாக துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்தார். எம்எஸ்சி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த அவர் துப்புரவு பணியாளர் வேலையில் சேர்வது குறித்து எந்தவிதமான தயக்கமும் காட்டவில்லை. தனக்கு தனது குடும்பம் தான் முக்கியம் என்று அவர் அந்த பணியை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஊடகம் ஒன்று அவரை பேட்டி எடுத்தது. அவரது படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் இந்த பணியில் சேர்ந்ததாக அவர் அந்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார். இந்த பேட்டி ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த செய்தியை பார்த்த தெலுங்கானா மாநில சிறப்பு தலைமைச் செயலாளர் மற்றும் நகர்புற வளர்ச்சி செயலாளர் ஆகியோர் ரஜனியை நேரில் அழைத்து அவரது சான்றிதழை சரி பார்த்தனர். பின்னர் அவருக்கு பூச்சிஇயல் துறையில் உதவி பூச்சியியல் நிபுணர் என்ற பணிக்கு நியமன ஆணையை வழங்கினர்.

தற்போது அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைப்பதாகவும் தனது குடும்பத்தை அவர் மகிழ்ச்சியுடன் காப்பாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே ஒரு ஊடகத்தில் வந்த செய்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையே தலைகீழாக திருப்பி விட்டதை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version