விளையாட்டு

விவசாயத்தில் கலக்கும் நம்ம ‘தல’ தோனி… வைரலாகும் பண்ணை வீடியோ!

Published

on

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வகையில் புதிதாக ஒரு பெரும் பண்ணையை உருவாக்கி விவசாயத்தில் களம் இறங்கி உள்ளார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் மஹிந்திர சிங் தோனி.

தோனி தனது பண்ணை வீட்டில் சொந்தமாகவே ஆர்கானிக் விவசாயத்தைத் தொடங்கி உள்ளார். ராஞ்சி முதல் துபாய் வரையில் தோனி விவசாயம் செய்த காய்கறிகள், பழங்குகளுக்கு கடுமையான கிராக்கி நிலவுகிறது. தோனி சமீப காலமாக தனது விவசாயம் சார்ந்த வீடியோக்களை சமுக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்.

தற்போது தனது நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி பழங்களை வேரில் இருந்து பிடுங்கி உண்ணும் தோனியின் வீடியோ பதிவு வைரலாகி உள்ளது. அந்த வீடியோ பதிவில் தோனி,”இப்படியே நான் அடிக்கடி நிலத்துக்கு வந்து கொண்டிருந்தால் சந்தைக்கு அனுப்ப எதுவும் இருக்காது போலிருக்கே’ எனப் பழங்களை பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டே சொல்லி உள்ளார்.

Trending

Exit mobile version