இந்தியா

லடாக்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ள தோனி!

Published

on

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி லடாக்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இரண்டு மாதம் ஓய்வில் உள்ள தோனி ராணுவத்தின் மீது கொண்டா ஆர்வத்தால் காஷ்மீருக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகளில் படித்தோம். இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் வரும் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு தோனி அங்கு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.

தோனி லடாக்கில் தேசியக் கொடி ஏற்றவுள்ள நிகழ்ச்சியில் லடாக் தொகுதியின் எம்பி ஜம்யங் செரிங் கலந்து கொள்ள உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக தேசியக் கொடி ஏற்றும் இடம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தோனி ஜூலை 31 முதல் 106 டிஏ பட்டாலியனில் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version