தமிழ்நாடு

‘வருஷத்துக்கு 5, 6 கோடி சொத்து வாங்குறேன்..!’- ரெய்டில் சிக்கிய Ex அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘வாக்குமூல வீடியோ’

Published

on

அதிமுகவின் கருர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான சுமார் 26 இடங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையைக் கண்டித்த அதிமுக தரப்பு, ‘இது விஜயபாஸ்கரின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏவி விடப்பட்ட சோதனை’ என்று விளக்கம் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘என் மீது போடப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். சென்னை, கரூர் ஆகிய இரண்டு இடங்களிலும் எனக்கு வாடகை வீடுகள் மட்டும் தான் உள்ளன. எனக்குச் சொந்த வீடுகள் கூட இல்லை’ என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தார்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘வருஷத்துக்கு 5, 6 கோடி சொத்து வாங்கிட்டு தான் இருக்கேன் இல்லன்னு சொல்லல’ என்று வெளிப்படையாக பேசும் வீடியோ ஒன்று தற்போது ரெய்டுக்குப் பின்னர் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version