தமிழ்நாடு

செந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார் என கேட்டுச் சொல்லுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

Published

on

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி எப்போது தூக்குப்போட்டுக் கொள்கிறார் என கேட்டுச் சொல்லுங்கள், அப்போது நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசமாக பேசியுள்ளார்.

அமமுகவில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்த செந்தில் பாலாஜி அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி 37957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த தேர்தலுக்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டே சென்றுவிடுகிறேன் என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய செந்தில் பாலாஜி, தேர்தலில் நான் டெபாசிட் வாங்கிவிட்டால் சிலர் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன், பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று சொன்னார்கள். அவர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இது தொடர்பாக பதில் அளித்தார். அப்போது, அமமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றிபெற்றால் அரசியலிலிருந்து விலகத் தயார் என்று கூறியது உண்மைதான். செந்தில் பாலாஜி கூடத்தான் தினகரனை முதல்வராக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவேன் என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் எப்போது தூக்குப்போட்டுக் கொள்கிறார் என்று. அப்போது நானும் பதவி விலகுகிறேன் என ஆவேசமாக பதில் அளித்தார்.

seithichurul

Trending

Exit mobile version