சினிமா செய்திகள்

எம்.ஆர். ராதா பயோபிக்கில் சிம்பு? வைரலாகும் வதந்தி உண்மையா? பொய்யா?

Published

on

மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக எம்.ஆர்.ராதா பயோபிக் படத்தில் எம்.ஆர்.ராதாவாக நடிக்கிறார் என்றும் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்க உள்ளார் என்ற வதந்தி தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

ஆனால், எம்.ஆர். ராதா பயோபிக்கை இயக்கும் எம்.ஆர். ராதா பேரன் இயக்குநர் ஜக் இந்த செய்தி வதந்தி தான் என்றும் சிம்பு எம்.ஆர். ராதாவாக நடிக்கவில்லை என்றும், எம்.ஆர். ராதாவாக நடிக்க சரியான கேஸ்டிங்கை தேர்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மாநாடு படத்திற்கு முன் கெளதம் கார்த்தி படம் ஒன்றிலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது தந்தை டி.ராஜேந்தர் படு பிசியாக பெண் பார்த்து வருகிறாராம்.

seithichurul

Trending

Exit mobile version