இந்தியா

நடிகையின் மகன் பெயர் என்ன? 6ஆம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்ட பள்ளி மீது நடவடிக்கை!

Published

on

நடிகையின் மகன் பெயர் என்ன என ஆறாம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது அறிவுக்கான தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்தத் தேர்வில் பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்ட நிலையில் நடிகை கரீனா கபூர் – சைப் அலிகான் தம்பதியின் மகனின் முழு பெயர் என்ன? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு பல மாணவர்கள் தவறாகவும் சில மாணவர்கள் சரியாகவும் பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கேள்வியை பார்த்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நடிகையின் மகன் பெயரை தெரிந்து கொள்வதுதான் பொது அறிவா? என கேள்வி கேட்டு திடீரென பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் குறித்து சமூக வலைதளங்களிலும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து பள்ளியின் பெயர் டேமேஜ் ஆக தொடங்கியது. இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகி இடம் விசாரணை நடத்தினார். விரைவில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஅறிவு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கரீனா கபூரின் மகனின் முழு பெயர் தைமூர் அலி கான் என்பதை பலர் கூகுளில் தேடி பார்த்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலுடன் பதிலளித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version