இந்தியா

“நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்பா!”- பல்டியடித்த ம.பி. முதல்வர்

Published

on

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு சமர்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதே நேரத்தில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அப்படியான தரவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘கொரோனா தடுப்பூசி பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது நிலை சோதனையில் தெளிவில்லாத நிலையில் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் மத்திய பிரதேச, பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘இப்போதைக்கு நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அது முதலில் மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நான் அதன் பின்னர்தான் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். யாருக்கு இந்த தடுப்பூசி அதிகம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இது கொரோனா தடுப்பூசி குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version