சினிமா

இன்று ஓ.டி.டி.யில் வெளியான திரைப்படங்கள் – 13 செப்டம்பர் 2024!

Published

on

சென்னை: திரைப்படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் மட்டுமின்றி ஓ.டி.டி. தளங்களிலும் வெளிவருவது இன்று வழக்கமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக, சில படங்கள் திரையரங்குகளில் வெளியான பின் ஓ.டி.டி.யிலும் வெளியிடப்படுகின்றன, அதேசமயம் சில திரைப்படங்கள் நேரடியாகவே ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. இன்று (13 செப்டம்பர் 2024) ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ள சில முக்கிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பற்றிய விவரங்கள் இங்கே:

நுனக்குழி (ZEE5) இயக்குனர் ஜித்து ஜோசப், மோகன்லால் நடித்த ‘நேரு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், தற்போது ‘நுனக்குழி’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை ZEE5 ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் கிரேஸ் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு (Aha Tamil) ‘மீசைய முறுக்கு’ படத்தில் புகழ்பெற்ற ஆனந்த் நடிப்பில், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கதையை கொண்டுள்ளது.

ரகு தாத்தா (Homable Films) கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரகு தாத்தா’ திரைப்படம், ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. தற்போது, இதுவும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

கோலி சோடா ரைசிங் (OTT Platforms) 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ படத்தின் வெற்றி பிறகு, அதன் இரண்டாம் பாகம் வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டு ‘கோலி சோடா ரைசிங்’ என்ற பெயரில் இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் சேரன், ஷியாம், ரம்யா நம்பீசன், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Poovizhi

Trending

Exit mobile version