சினிமா

இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் – 23.08.24!

Published

on

சென்னையில் திரையரங்குகளில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று (23.08.24) ஒவ்வொரு ஓ.டி.டியில் வெளியான படங்களைப் பார்ப்போம்:

ராயன் (Raayan) – தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவான இந்த படம், இன்று ஜியோ சினிமா தளத்தில் வெளியானது.

டிரைவ் அவே டால்ஸ் (Drive Away Dolls) – ஈதன் கோயன் இயக்கத்தில் மார்கரெட் குவாலி, ஜெரால்டின் விஸ்வநாதன், பீனி பெல்ட்ஸ்டீன் ஆகியோர் நடித்த படமானது இன்று ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

இன்கம்மிங் (Incoming) – டேவ் செர்னின், ஜான் செர்னின் இயக்கத்தில் மேசன் தேம்ஸ், இசபெல்லா பெரீரா, லோரன் கிரே நடித்த இந்த படம், இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

தி பிராக் (The Frog) – மின்-சி செல், கிம் யூன்-சியோக், லீ ஜங்-யூன் ஆகியோர் நடித்த கொரியன் சீரிஸ் ‘தி பிராக்’ எபிசோடு இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

பாளோ கர் லோ யார் (Follow Kar Lo Yaar) – சந்தீப் குக்ரேஜா இயக்கத்தில் உர்பி ஜாவேத் நடித்த இந்த சீரிஸ், இன்று பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.

பச்சிங்கோ சீசன் 2 (Pachinko Season 2) – கோகோணடா, ஜஸ்டின் சோன் இயக்கத்தில் கிம் மின்-ஹா, லீ மின்-ஹோ, ஜின் ஹா மற்றும் யூன் யூ-ஜங் ஆகியோர் நடித்த பச்சிங்கோ சீசன் 2 சீரிஸ், இன்று ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

Poovizhi

Trending

Exit mobile version