தொழில்நுட்பம்

மார்ச் 10 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா Moto G73: என்னென்ன சிறப்புகள்..!

Published

on

ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மோட்டரோலா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் வரும் 10ஆம் தேதி புதிய வகை மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில் இந்த ஃபோனுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோரோலா புதிய மாடலான Moto G73 ஸ்மார்ட்போனை மார்ச் 10 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் இதுகுறித்த போஸ்டரை வெளியிட்டு, வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியது.

Moto G73 மாடலில் 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் MediaTek இன் Dimensity 930 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடலில் 50MP வரை ஸ்டோரேஜ் இணைத்து கொள்ளலாம். 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 16MP செல்பி கேமிராவும் உள்ளது. .

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் மோட்டோரோலாவின் My UX மேலடுக்கில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரியுடன் 30W வேகமான சார்ஜிங்குடன் அறிமுகமாக உள்ளது. மோட்டோரோலா Moto G73 5G மாடல் ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ, லூசண்ட் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்க்கும். மோட்டோரோலாவின் அதிகாரபூர்வ இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோரோலா இந்தியாவில் மார்ச் 10 அன்று வெளியாகும் Moto G73 விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000 என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version