தொழில்நுட்பம்

மோட்டோ G51 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி மற்றும் சிறப்பு அம்சங்கள்!

Published

on

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய மோட்டரோலா புதிய மாடல் ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதனை அடுத்து இந்த போனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான கேமரா, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வசதி, சிறந்த செயல்திறன், ஸ்டைலான மாடல் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் குறைந்த மீடியம் பட்ஜெட்டிலும் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்தநிலையில் மோட்டோ ஜி 51 ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக மோட்டரோலா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மோட்டோ ஜி 51ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் SoC சிப்செட்
8GB RAM வசதி
50 MP பிரைமரி கேமிரா மற்றும் 8MP ஆல்ட்ரா ஒயிடு கேமிரா
2 MP மைக்ரோ ஷூட்டர்
செல்பி கேமிரா 13 MP
128 GB ஸ்டோரேஜ் வசதி
5000 mAh பேட்டரி
10W சார்ஜிங் சப்போர்ட்

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 என இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending

Exit mobile version