சினிமா செய்திகள்

தாய் மொழி தினம் – தமிழ் ஆந்தம் பாடலை சமர்ப்பணம் செய்த எல்.கே.ஜி குழு!

Published

on

ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படம் நாளை ரிலீசாகிறது. மேலும், நாளை உலக தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய தமிழ் ஆந்தம் ஒன்றை எல்.கே.ஜி படக்குழு தற்போது யூடியூபில் வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில், பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை பாடகர்கள் சித் ஸ்ரீராம், சின்மயி, பி.சுசிலா, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாடியுள்ளனர்.

பாடலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் வரிகளும் அழகாக இடம்பெற்று மொழிப்பற்றை வளர்க்கும் விதமாக பாடல் உருவாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version