உலகம்

மிகத் துல்லியமான நிலவின் புகைப்படம்: அமெரிக்க வானியல் ஆய்வாளர் சாதனை!

Published

on

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆய்வாளருமான அண்ட்ரூ மெக்கார்தி, நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை படம் பிடித்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் எடுத்த நிலவின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மிகத் துல்லியமான நிலவு

நிலவின் மிகத் துல்லியமான இந்த புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பானது மிகத் தெளிவாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புகைப்படத்தை எடுப்பதற்காக இரண்டு தொலைநோக்கிகளையும், இரண்டு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப் புகைப்படங்களையும் பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிக துல்லியத்தைப் பெறுவதற்காக, தொடர்ந்து 2 வாரங்கள் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் புகைப்படம் ஒரு ஜிகா பிக்சல் அளவு கொண்டது எனவும், இதனை அதே அளவு துல்லியத்துடன் பதிவிறக்கம் செய்யும் சமயத்தில், கணிணியின் செயல் வேகம் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை எடுத்த விதம் குறித்த வீடியோ ஒன்றனையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிலவின் மிகத் துல்லியமான படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நிலவை ஆராய்ச்சி செய்யும் பல விஞ்ஞானிகளுக்கு மத்தியில், இவரது இந்த சாதனை என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version