விமர்சனம்

கேம் விளையாட பிடிக்குமா? ‘Mortal Kombat’ – விமர்சனம்

Published

on

வெளியில் இருக்கும் உலகத்தினர் பூமியை ஆக்கிரமிக்க நினைக்கும் போது அதைத் தடுக்க ஒரு குரூப் இருப்பார்கள் தானே. அப்படியான இரண்டு குரூப்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டுத்தான் இந்த மோர்ட்ல் காம்பட். ஹாலிவுட்டில் பார்த்துப் பழகி, பின்னி எடுத்த அதே கதைதான். உலகை அளிக்க நினைக்கும் வில்லன்களிடம் இருந்து உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ-க்கள் கதை தான் இதுவும். மோர்டல் காம்பட்.

வீடியோ கேம்மை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் சிமோன் மக்குயாட். வீடியோ கேம் எப்படி இருக்கும் என்றோ அதை விளையாடியதோ இல்லை என்பதால் படம் எப்படி இருந்தது என்பதை மட்டும் இங்கு பார்ப்போம்.

வெளி உலகத்தில் இருந்து பூமியை அழிக்க ஒரு குழு வருகிறது. அதை எதிர்க்கிறது மற்றோரு குழு. இரண்டு குழுக்களில் இருப்பவர்களுக்கும் ஒவ்வொரு பிரத்யேக சக்தி இருக்கிறது. வெளி உலகத்தில் இருப்பவர்கள் பல உலகங்களை முன்னரே ஜெயித்து விட்டார்கள் என்பதால் அவர்கள் தற்போது பூமியை தாக்க வந்திருக்கிறார்கள். முன்னர் உலகங்களில் போராடிய சில சூப்பர் சக்தி உள்ளவர்கள் பூமியில் சில சக்திமான்களை கண்டறிந்து அவர்களை போருக்கு தயார் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொண்டு இறுதியில் போட்டியில் வென்று உலகத்தை காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான். இந்தக் கதை.

விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளோடு நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கிறது. படத்தில் வரும் அனைத்து சண்டைகளும் அட்டகாசம். ஆனால், படமாக்கப்பட்ட விதம் ரொம்ப ஸ்லோவாக இருப்பதால் அதை ரசிக்க முடியவில்லை. தற்காப்பு கலையை இவ்வளவு ஸ்லோவாக படமாக்கியது இந்தப் படத்திலாகத்தான் இருக்கும். அதை சரி செய்திருந்தால் ஒரு அட்டகாசமான அனுபவத்தை கேம் பிளேயருக்குக் கொடுத்திருக்கும். பயர் டிராகன், ஐஸ் மேன் வில்லன், இடியின் கடவுள் என படம் நெடுக நிறைய பேன்டஸி விஷயங்கள் ரசிக்க இருக்கின்றன. ஆனால், ஸ்லோவாக காட்சி அமைப்பு அதை ரசிக்க விடாமல் நம்மை சோர்வாக்குகிறது.

ஒரு அட்டகாசமான சண்டை படத்தை கொஞ்சம் ஸ்லோவாக பார்க்கும் அளவிற்கு உங்களுக்கு பொறுமை இருக்குமானால் நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கானது. மற்றபடி ஹாலிவுட்டில் வந்திருக்கும் மற்றோரு உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் படம் தான் இதுவும். கேமர்கள் ரொம்ப விரும்புவார்கள் இதை.

seithichurul

Trending

Exit mobile version