தமிழ்நாடு

இந்தியாவில் முதல்முறையாக 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

Published

on

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று வந்த தகவலின் படி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம்:

மகாராஷ்டிரா – 61,695

உத்தரபிரதேசம் – 22,339

டெல்லி – 16,699

சண்டிகர்- 15,256

கர்நாடகா – 14,738

மத்தியபிரதேசம் – 10,166

குஜராத் – 8,152

கேரளா – 8,126

தமிழ்நாடு – 7,987

மேற்குவங்காளம் – 6,769

ராஜஸ்தான் – 6,658

பீஹார் – 6,133

ஹரியானா – 5,858

ஆந்திரா – 5,086

பஞ்சாப் – 4,311

ஜார்கண்ட் – 3,480

தெலுங்கானா – 3,307

ஒடிஷா – 2,989

உத்தரகாண்ட்- 2,220

ஜம்மு காஷ்மீர் – 1,141

ஹிமாச்சல் பிரதேசம் – 1,034

Trending

Exit mobile version