தமிழ்நாடு

ஒரு லட்சம் மாணவர்கள்: சென்னை மாநகராட்சி பள்ளியின் சாதனை!

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நடுத்தர வர்க்கத்தின் பெற்றோர்களே தயங்குவார்கள் என்பதும், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில்தான் சேர்த்து வரும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளிகளிலும் பல வசதிகள் வந்துவிட்டன. குறிப்பாக சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை விட அதிக வசதிகள் இருக்கிறது என்பதும் அது மட்டுமின்றி செலவில்லாமல் நல்ல தரமான கல்வி இலவசமாக கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வருமானம் அதிகமாக குறைந்துவிட்டதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாத பலர் அரசு பள்ளிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 281 அரசு மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1,01,757 மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இனிவரும் காலங்களிலும் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை விட அதிக அளவில் மாணவர்கள் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தனியார் பள்ளிகள் கல்வித் துறையில் டாமினேட் செய்த நிலையில் அரசு பள்ளிகளூம் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை சேர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version