இந்தியா

திருப்பதி கோவிலில் ஒருநாள் முழுவதும் தரிசனம் செய்ய இத்தனை கோடியா?

Published

on

திருப்பதி கோவிலில் ஒரு நாள் முழுவதும் அனைத்து சேவைகளையும் தரிசனம் செய்ய கோடிக்கணக்கில் வசூல் செய்யப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தரும் கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பதும் இந்தக் கோவில் உலகிலேயே பணக்கார கோவில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்கு பல விதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் சுப்ரபாதம் அர்ச்சனை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரு நாள் முழுவதும் கோயிலிலிருந்து தரிசனம் செய்ய செய்யும் உதய அஸ்தமன சேவை என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க சாதாரண நாட்களில் ரூபாய் ஒரு கோடி கட்டணம் என்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ரூபாய் ஒன்றரை கோடி கட்டணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version