உலகம்

ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு: அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

Published

on

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் கண்டறியப் பட்ட நிலையில் நேற்று 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 565,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 55,246,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க சுகாதார துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1354 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு பக்கம் ஒமிக்ரான் வைரசும் மிக மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க சுகாதாரத்துறை இது குறித்து கூறிய போது அமெரிக்காவில் கொரோனா நிலைமை கைமீறிப் போய் விட்டதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி ரஷ்யா பிரிட்டன் உள்ளிட்ட ஒரு சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக அதிகமாகி வருவது உலகம் முழுவதும் மீண்டும் ஒரு அலையை ஏற்படுத்தும் என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version