இந்தியா

திருமுருகன் காந்தி உள்பட 300 பேர்களின் செல்போன்கள் வேவுபார்ப்பா? மத்திய அரசு விளக்கம்

Published

on

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300க்கும் அதிகமானவர்களின் செல்போன் எண்கள் பிகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் உள்பட பிரபலங்கள், இந்தியா டுடே உள்பட பல பத்திரிகை பிரபலங்களின் செல்போன் எண்கள், பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் செல்போன் எண்கள் வேவு பார்த்ததாக தெரிகிறது.

பிகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்ட எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் உள்பட 300க்கும் அதிகமானவர்களின் செல்போன்கள் பிகாசஸ் மூலமாக வேவுபார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறிதும் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்களின் செல்போன்கள் வேவுபார்க்கப்பட்டதாக வந்திருக்கும் தகவல் இன்றைய நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக எழும்பும் என்று கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தனியார் நிறுவனங்கள் ஒருவேளை வேவு பார்த்து இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Trending

Exit mobile version