தமிழ்நாடு

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை: முதல் நாளில் இத்தனை ஆயிரம் பேர் விண்ணப்பமா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆக உள்ளதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே

குறிப்பாக இன்று முதல் பொறியியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாக உள்ளதாகவும் மாணவர்கள் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது

இந்த நிலையில் இன்றைய முதல் நாளிலேயே பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு 25611 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விண்ணப்பித்த 25 ஆயிரத்து 611 பேர்களில் 10 ஆயிரத்து 84 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர் என்றும் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பித்த 25611 பேர்களில் 5633 தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஒவ்வொரு ஆண்டும் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் நாளிலேயே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் வரும் நாட்களில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற www.tneaonline.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதும், இன்று முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version