இந்தியா

ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா: மோசமான நிலையில் மகாராஷ்டிரா!

Published

on

தமிழகம் உள்பட இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற அளவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று ஒரே நாளில் 84 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் 23 ஆயிரத்து 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்ததாகவும் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 22 லட்சம் கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே, அவுரங்காபாத் உள்பட சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் கடைகள் இரவு நேரத்தில் அடைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் ஐந்து பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என்றும் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version