இந்தியா

கங்கை நதியில் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?

Published

on

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதை பார்த்து கரையோரம் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனாவால் நாளுக்கு நாள் பலியாகி வரும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுடுகாட்டில் கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சில கிராமத்தினர் கொரோனாவால் உயிரிழந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த பிணங்கள் அழுகி தண்ணீரில் மிதந்து உத்தரப்பிரதேச மாநிலம் வரை வந்து கொண்டிருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வந்ததால் அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இந்த பிணங்கள் எல்லாம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கி வீசி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version