இந்தியா

ஒரே நாளில் 1100 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Published

on

இந்திய பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் 1,100 புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வந்தது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி வந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும், தங்களுடைய முதலீடுகள் பல மடங்கு உயர்ந்ததாக கருத்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை சரிவுடன் காணப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கு மேலாக பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று வர்த்தகம் முடிவின்போது சென்செக்ஸ் 1158.63 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ் 59984.70 என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது. அதேபோல் நிப்டி 353.70 புள்ளிகள் சரிந்து 17,857.25 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதலே சரிவில் இருந்த பங்கு சந்தை திடீரென அதலபாதாளத்துக்குச் சென்றது முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. குறிப்பாக வங்கி துறையான ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் 3 சதவீதம் சரிவு அடைந்ததாகவும், ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 5% வீழ்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவின் ஈக்விட்டி மீதான மதிப்பினைக் குறைத்ததால் தான் இந்த சரிவுக்கு காரணம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக பங்குச்சந்தை மிக அதிக அளவில் அதிகரித்து வந்ததால் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குச்சந்தையில் இருந்து வெளியேறியதன் காரணமாகவும் பங்குச்சந்தையின் சரிவு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அந்நிய நிறுவனத்தின் முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கள் பங்குகளை வெளியேற்றி வருவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இனி வரும் நாட்களில் பங்கு சந்தையில் இறக்கம் இருக்கலாம் என்றும் முதலீட்டாளர்கள் இன்னும் லாபத்தை புக் செய்யும் மன நிலையில் இருப்பதால் இன்னும் பங்குச்சந்தை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version