இந்தியா

ரயிலில் அதிகரிக்கும் ஓசிப்பயணம்: எத்தனை கோடி அபராதம் தெரியுமா?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் அடிக்கடி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்த போதிலும் ஓசிப்பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது .

ஒவ்வொரு ஆண்டும் ஓசிப் பயணம் செய்பவர்களிடம் அபராத தொகையை ரயில்வே துறை வசூலித்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இந்த அபராதத் தொகை வசூல் ஆயிரக்கணக்கான கோடியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.7 கோடி என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

டிக்கெட் எடுக்காமல் ஓசிப்பயணம் செய்பவர்களிடமிருந்து இந்த ஒன்பது மாதத்தில் 1017 கோடி அபராதம் வசூல் செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version