தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை முன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு: தூத்துகுடியில் பரபரப்பு!

Published

on

ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு மேல் நடந்த இந்த போராட்டத்தின் முடிவில் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதும் அதில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தூத்துக்குடி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜனை தயாரிக்கலாமே என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்களிடம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம் என்பது குறித்து அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் அந்த பகுதி மக்கள் போராட்டம் ஆரம்பிக்கலாம் என்ற தகவல் வெளிவந்து உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version