இந்தியா

இந்தியாவில் 100ஐ தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் இதுவரை 80 நாடுகளுக்கும் மேல் பரவி விட்டதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் முதல் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும் தலைநகர் டெல்லியில் 22 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version