இந்தியா

10 மாதங்களில் மூடப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள்: தமிழகத்தில் எத்தனை?

Published

on

நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலைகள் நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2394 நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 1936 நிறுவனங்களும் தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக தொழில்துறை மீண்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version