சினிமா செய்திகள்
’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இந்திய வெர்ஷனா ‘அஜித் 61?
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடரின் இந்திய வெர்ஷன் தான் ‘அஜித் 61’ திரைப்படம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
‘அஜித் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்ற செட் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகிய ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடரின் இந்திய வெர்ஷன் என்று கூறப்படுகிறது
அதாவது சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்க அஜித் திட்டமிட்டதாகவும் அவரது குழுவினர் அதை சரியாக முடிக்கின்றனர் என்பதும்தான் கதை என்றும் அதை முறியடிக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தான் கிளைமாக்ஸ் என்றும் கூறப்படுகிறது
’மணி ஹெய்ஸ்ட்’தொடரின் இந்தியன் வெர்ஷன் தான் அஜித் 61 திரைப்படம் என்ற தகவலை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது