சினிமா செய்திகள்

முடிவுக்கு வருகிறது ‘மணி ஹெய்ஸ்ட்’: படக்குழு அறிவிப்பு!

Published

on

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிய ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த தொடர் ஏற்கனவே ஐந்து பாகங்கள் வெளியாகியது என்பதும் சமீபத்தில் வெளியான ஐந்தாம் பாகம் முதல் செஷன் மற்ற பாகங்களை சுமாராக இருந்தாலும் அந்த பாகத்தில் உள்ள காட்சிகளை விறுவிறுப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ப்ரொஃபஸர் நான்காவது பாகத்தில் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் டோக்கியோ மிக அபாரமாக நடித்து இருந்தார் என்றும் அவர் இறுதியில் இறந்துபோவது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. ‘மணி ஹெய்ஸ்ட்’ 5வது பாகத்தின் டிரைலரை சற்றுமுன் வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் ஐந்தாவது பாகத்தோடு ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் முடிவடைந்தது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் ஐந்தாவது பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மணி ஹெய்ஸ்ட்’ 5வது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version