சினிமா செய்திகள்

’மணி ஹெய்ஸ்ட் 5’ ரிலீஸ்: விடுமுறை அளித்த பிரபல நிறுவனம்!

Published

on

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்தொடர் நான்கு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. பணம் அச்சடிக்கும் வங்கியில் பணத்தை அச்சடித்து கொள்ளையடிப்பது குறித்த கதையம்சம் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் தமிழிலும் இந்த தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மறுநாள் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் ’மணி ஹெய்ஸ்ட் 5’ வெளியாக உள்ளது. இதனை அடுத்து உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

’மணி ஹெய்ஸ்ட் 5’ ரிலீஸ் தேதியை கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நாளை மறுநாள் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ’மணி ஹெய்ஸ்ட் 5’ தொடரை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் அண்ட் சில் என்ற நிறுவனம் ’மணி ஹெய்ஸ்ட் 5’ ரிலீசாகும் செப்டம்பர் 3-ஆம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ’மணி ஹெய்ஸ்ட் தொடர்கள் ரிலீஸானபோது, பல ஊழியர்கள் பொய்யான காரணத்தைக் கூறி விடுமுறை எடுத்துள்ளனர் என்றும், இந்த முறை அவ்வாறு யாரும் தேவையில்லாமல் பொய்க் காரணங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அன்றைய தினம் விடுமுறை அளிப்பதாகவும் நகைச்சுவையாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மிகுந்த பணம் அச்சிடும் இடத்திற்கே சென்று கோடிக்கணக்கான ரூபாய் பணம் அச்சடித்து கொள்ளையடிக்கும் புரபசர் தலைமையிலான கும்பல் ஒன்று எப்படி தப்பிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

’மணி ஹெய்ஸ்ட்’ நான்காவது சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நைரோபி என்ற கதாபாத்திரம் உயிரிழந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த சீசனில் அந்த கேரக்டருக்கு பதில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version