இந்தியா

மீண்டும் உயிரை கொள்ளும் ஒரு விளையாட்டு.. மோமோ சேலஞ்ச்.. எச்சரிக்கும் போலீசார் !

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு இளைஞகள் மத்தியில் பரவிய வந்தது. கண்ணுக்குத் தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற டாஸ்க்கும் உண்டு.

தற்போது இந்த விளையாட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வரலாகியுள்ளது.

மோமோ விளையாட்டு என்பது ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். அதன்பின்னர் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் நுழைந்த யாரும் வெளியே வரமுடியாது. அப்படி வெளியேற முயற்சித்தால் அவர்களை மிரட்டும் விதத்தில் வன்முறையைச் சித்தரிக்கும் படங்கள் அவர்களுடைய மொபைலுக்கு மெசேஜ் வரும். அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் உள்ளே நுழையும்போது பதிவு செய்யப்பட்ட விளையாடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் பயமுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பிள் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்தச் சேலஞ்ச் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதாகவும், இந்த விளையாட்டை உடனடியாக முடக்கி இளைஞர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version