சினிமா செய்திகள்

வாட்ஸாப்புக்கு குட்பை சொன்ன மோகன்லால்!

Published

on

சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸாப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என பலவும் ஆரம்பத்தில் ஜாலியாகவும், போக போக கடுப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

சமூக ஊடகங்களால் நன்மை 25 சதவீதம் விளைகிறதென்றால், தீமை 75 சதவீதம் விளைகின்ற நிலைமைக்கு இன்றைய சூழலும், குரூர புத்திக் காரர்கள் அதில் செய்யும் சேட்டையும், பணம் பறிக்கும் கும்பல் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்டு ஆடும் வேட்டையும் என சமூக வலை தளங்கள் சமுதாயத்தை சீர்குழைக்கும் கருவிகளாக வெகு விரைவில் மாறி வருவதை அன்றாட செய்திகளில் அறிந்து வருகிறோம்.

மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால், தனது வாட்ஸாப் அக்கவுண்டை டெலிட் செய்துள்ளார். மேலும், இது குறித்து கூறிய அவர், எதிர்மறையான நெகட்டிவிட்டி வாட்ஸாப் மூலம் பரவியதாகவும், மனிதர்களை சந்திக்க பேச, இதை விட நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் வைத்திருந்தாலே வாட்ஸப் என்ற செயலி வைத்திருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கட்டளையை அனைவரும் பின்பற்றி வருகிறோம்.

அது நமக்கு நல்ல தகவல்களை தரும் என்ற பார்த்தால், அதில் வரும் முக்கால்வாசி தகவல்கள் புனையப்பட்ட கருத்துகளாகவும், பொய் செய்திகளாகவுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோகன் லாலின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version