சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ‘ஜெயம்’ மோகன்ராஜா..!

Published

on

மலையாளம் மற்றும் தமிழில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்குகிறார்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் லூசிஃபர் திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி தற்போது நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து அதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கும் இரண்டாம் தெலுங்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கில் முதல் படமான ஹனுமன் எக்ஸ்பிரஸ் என்னும் திரைப்படத்தை இயக்கியவர் மோகன் ராஜா. அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் படமாக டோலிவுட்டில் உள்ளது.

Trending

Exit mobile version