சினிமா செய்திகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் மோகன் ராஜா மகன்!
![mohan raja - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/mohan-raja.jpg)
தம்பி ஜெயம் ரவியின் மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான குறும்பா பாடல், யூடியூபில் ஒரு கலக்கு கலக்கியது.
இந்நிலையில், தற்போது இயக்குநரும் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜாவின் மகனும் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகவுள்ள தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனியின் மகனாக மோகன் ராஜாவின் மகன் பிரணவ் நடிக்கவுள்ளார்.
நடிப்புத் துறையில் அறிமுகமாகும் தனது மகனை ரசிகர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என ட்விட்டரில் மோகன் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
நேற்று நடைபெற்ற பட துவக்கவிழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பிரணவ் நடித்த முதல் காட்சியை கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார்.